[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

‘காலா’வை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது - குமாரசாமி

kumaraswamy-says-kaala-release-will-not-be-good-in-karnataka

‘காலா’திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடாமல் இருப்பதே நல்லது என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக குமாரசாமி கூறுகையில், “காலாவுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை எதிர்ப்பு தெரிவிக்கின்றன. படத்தை திரையிட்டால் கர்நாடகாவில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு. மாநிலத்தின் அமைதிக்காக ‘காலா’வை திரையிடாமல் இருப்பது தான் நல்லது. படத்தை வெளியிட்டால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்கொள்ள வேண்டும்” என்றார். 

மேலும், “காலா படத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்ற கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. உத்தரவு நகல் கிடைத்த உடன் திரையரங்கங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று அவர் கூறினார். 

          

முன்னதாக, கர்நாடகாவில் ‘காலா’ திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை விதித்தது. இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் கூறுகையில், “காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள்,  விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close