[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற முயற்சி: மோடி உறுதிமொழி

try-to-fulfill-ambedkar-s-dream-modi-promises

அம்பேத்கருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை என்று, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

கர்நாடகா மாநிலத்தில் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர், இந்தியாவை சக்திவாய்ந்த மற்றும் வளமான நாடாக மாற்ற வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவுகளை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருந்தபோது, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விரு‌‌து வழங்கவில்லை என்று விமர்சித்த பிரதமர் மோடி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் எம்.பி.களாக பா.ஜ.க.விலிருந்து அதிகளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஓ.பி.சி. ஆணையத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதை தடுக்கவே நாடாளுமன்றத்தை காங்கிரஸ் நடத்தவிடாமல் செய்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close