[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

ஓபிஎஸ் மகன் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர் ! சசிகலா வழக்கறிஞர் 

ops-son-not-admk-number-v-k-sasikala-lawyer

2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களின் பட்டியலை சசிகலா தரப்பு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்பித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களின் பட்டியலை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சமர்பித்துள்ளதுள்ளதாக தெரிவித்தார். அப்பட்டியலில் நத்தம் விஸ்வநாதன், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் உள்ளிட்டோரின் பெயர் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். மேலும் சசிகலா உதவியாளர் கார்த்திகேயனிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்த நிலையில், மீண்டும் வரும் 12ஆம் தேதி விசாரணை நடத்த அனுமதி கேட்டிருப்பதாக அவர் கூறினார். 

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர்கள் அய்யப்பன், கண்ணன் மற்றும் அதிகாரிகள் ராமானுஜம், திரிபாதி உள்ளிட்ட 4 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த போவதில்லை என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக தமிழக அரசின் சிறப்பு செயலாளராக இருந்த சாந்தா ஷீலா நாயர், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கிளையின் மேலாளர் லீனா செல்வகுமாரியும் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close