[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

காவலர் மோடி வீக்கா இருப்பதால் எல்லாமே ‘லீக்’ ஆகிறது: ராகுல் அட்டாக்

too-many-leaks-the-chowkidar-is-weak-rahul-gandhi

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் எல்லாமே லீக் ஆகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “தகவல்கள் லீக் ! ஆதார் லீக் ! எஸ்.எஸ்.சி தேர்வு லீக் ! தேர்தல் தேதி லீக் ! சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்..எத்தனை லீக்..எல்லாவற்றிலும் லீக் ஆகிறது. காவலர் மோடி மிகவும் பலவீனமாக இருப்பதுதான் இதற்கு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 

சமீபத்தில் கர்நாடக தேர்தல் அறிவிப்பின் போது, முன் கூட்டியே தேதிகள் வெளியானது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் ஆப்ஸில் தகவல்கள் திருடப்படுவதாக செய்திகள் வெளியானது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயன்பாட்டாளர்களின் தகவல்களை அனலிட்டிகா நிறுவனத்திற்கு விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close