[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

எதிர்க்கட்சித் தலைவரிடம் ஆலோசனை கேட்கும் முதலமைச்சர் - ஆக்கப்பூர்வ அரசியல் நாகரிகம் !!!!

big-change-over-in-tn-politics

தமிழகத்தில் எலியும் பூனையுமாக இருப்பது திமுகவும், அதிமுகவும். எப்போதும் களத்தில் எதிரிகளாக இருப்பவர்கள், சட்டமன்றத்திலும் கூட சண்டை போடுவார்கள். பார்த்தால் கூட புன்னகைக்க மறுப்பார்கள். பொது நிகழ்வுகளில் கூட இரண்டு கட்சியினரும் பார்த்தும் பாராததும் போல செல்வார்கள். ஆனால், இப்போது எல்லாம் மாறிப் போய் இருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவையெல்லாம் மறைந்து இப்போது எதிர்க்கட்சி தலைவரிடம் ஆலோசனை கேட்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. எத்தனையோ விவகாரங்களில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தும் அதனை ஏற்க தயாராக இல்லாத தமிழக அரசு முதல்முறையாக காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் மதிய உணவு அருந்தினார். எவையெல்லாம் இங்கு சாத்தியமில்லை என்ற சூழல் இருந்ததோ அவையெல்லாம் இப்போது நடக்கிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களை நிறைவேற்றியதோடு நில்லாமல் அதன் அடுத்த கட்ட நகர்வுகளை , எதிர்க் கட்சி தலைவரை அழைத்து கூறியிருக்கிறார், தொலை பேசியில் பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

திமுகவும் முதலமைச்சரை சந்தித்து, காவிரி விவகாரத்தில் நடப்பது என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டதோடு தங்களது தரப்பில் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறது. காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சியினரை சந்திக்க பிரதமர் மறுத்தால், சட்டமன்றத்தை கூட்டி , பிரதமர் சந்திக்க வேண்டும் என்று சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு முதலமைச்சரும் நேர்மறையாக பதிலளித்திருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் இது போன்ற ஒத்துழைப்பும், சிந்தனையும் கொண்டவர்களாக ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் இருந்தால், நிறைய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close