[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

விரைவில் சுதந்திர பாலஸ்தீனம்: மோடி நம்பிக்கை

india-hopes-to-see-independent-palestine-state-soon-says-pm-modi

பாலஸ்தீன பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜோர்டானில் இருந்து பாலஸ்தீனம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கு கரை நகரமான ரமல்லாவில் தரை‌யிறங்கிய பிரதமர் மோடியை, பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லா வரவேற்று அழைத்துச் சென்றார். இதைத்தொடர்ந்து மறைந்த பாலஸ்தீன அதிபர் யாசர் அராஃபத்தின் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அதிபர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மோடி, அதிபர் முகமது அப்பாஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

பின்னர் இருநாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் என்றும் தொலைநோக்குடன் செயல்பட்டால் வன்முறையில் இருந்து விடபட முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார். எனினும் இது அவ்வளவு எளிதாக இருக்காது என்றும் பிரதமர் மோடி கூறினார். மேலும், விரைவில் சுதந்திரமான பாலஸ்தீனம் நாட்டை பார்க்கலாம் என்ற நம்பிக்கை இந்தியாவிற்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close