[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

தொழிலாளர் பிரச்னை தீரும்வரை ஊதிய உயர்வு வேண்டாம்: ஸ்டாலின்

mk-stalin-on-mla-hike-issue

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகள் தீரும் வரை எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வை திமுக உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இந்தத் தீர்மானத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பதிலுரை வழங்கினார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு 100 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்படும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. திமுக , காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகள் தீரும் வரை எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதிய உயர்வை திமுக உறுப்பினர்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும், “போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது ஓய்வூதியம், சம்பள உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் தீர்வுக் காணப்படாமல் உள்ளது. அதற்கே நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு நூறு சதவீதம் ஊதிய உயர்வு அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னை தீரும் வரை சம்பள உயர்வை வாங்க மாட்டோம்” என்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close