[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ராமகிருஷ்ண மடத்தில் ரஜினி

rajinikanth-meeting-with-srimat-swami-gautamanandaji-maharaj

சென்னை ராமகிருஷ்ண மடத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.

ஆன்மிக அரசியல் கட்சியாக தனது புதிய கட்சி செயல்படும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அதனையொட்டி அவர் இன்று தனது ரசிகர் மன்றத்திற்காக ஒரு வலைதளத்தை தொடங்கியுள்ளார். இதனையடுத்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தனி ட்விட்டர் கணக்கையும் ஆரம்பித்துள்ளார். அவரது வலைதளத்தில் பாபாவின் கை முத்திரையும் அதில் நாகம் சுழன்று நிற்பதை போலவும் லோகோ இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து அவரது வீட்டுக்கு முன்பாக புத்தாண்டையொட்டி திரட்ட ரசிகர்களை சந்தித்து அவர் வாழ்த்தை பகிர்ந்து கொண்டார். 

இந்நிலையில் திடீரென்று அவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்குள்ள ஆன்மிக தலைவர் கெளதமானந்தாஜி மகராஜை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு பற்றி எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. யாரும் எதிர்பாராத தருணத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close