[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
அரசியல் 06 Dec, 2017 04:01 PM

கோவை, நெல்லை எனத் தொடரும் ஆளுநர் ஆய்வு

governor-banwarilal-purohit-visit-nellai-and-discuss-with-officials-after-kovai

கோவையை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நெல்லையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். 

கோவை மாவட்டத்திற்கு சமீபத்தில் சென்றிருந்த ஆளுநர் பன்வாரிலால், அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், ஆளும் அதிமுக, ஆளுநரின் ஆய்வு தவறான நடவடிக்கை இல்லை என்று கூறியது. மேலும், ஆளுநர் தனது ஆய்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடரும் என்றும் கூறியிருந்தார். 

இந்நிலையில், நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 25 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த வெள்ளிவிழா பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இதனையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அவரும் சிறிதுநேரம் துடைப்பத்தால்  சாலையில் உள்ள குப்பைகளை தூய்மை செய்தார். ஆய்வின் போது, தூய்மையின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சந்தீப், வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். 

பின்னர், மாவட்டத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை அழைத்து, வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, மாலை 6 மணி முதல் 7 வரை பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று கொள்கிறார். கோவை மாவட்டத்தை தொடர்ந்து நெல்லையிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டுள்ளது தமிழக அரசியலில் மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close