[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் :முதலமைச்சர் வாழ்த்து

international-day-of-persons-with-disabilities-cm-wishes

நாளை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைவதும், உரிமைகளைப் பாதுகாப்பதும் நமது கடமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016, அவர்களது முன்னேற்றத்தின் புதிய சகாப்தம் என்று கூறியுள்ளார். மாற்றுத் திறனாளிகளை மாண்புடன் கூடிய நிறைவான வாழ்க்கை வாழச் செய்வது நம் அனைவரது கடமை என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாக கூறிய அவர், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close