[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா

தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: டிடிவி தினகரன்

ttv-dhinakaran-press-meet-intrichy

அதிமுக எங்கள் இயக்கம் அதை மீட்டெடுப்போம் என்றும், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் ஏதுவும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக எங்கள் இயக்கம் அதை மீட்டெடுப்போம் என்றார். எங்கள் அணி சார்பில் தனிக்கொடியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் ஏதுமில்லை என்று பேசினார். இரட்டை இலை வழக்கின் தீர்ப்பில் கொடி, கட்சி அலுவலகம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இரட்டை இலை விவகாரம் தொடர்பாக 2 நாளில் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும், தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்றும் தினகரன் தெரிவித்தார்.

ஜானகி அம்மாள் போல் தினகரனும் ஒதுங்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியது குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி போன்றோர் எல்லாம் வருமானவரித்துறை சோதனைக்கு பயந்து, பிழைப்புக்காக பேசுவதை எல்லாம் தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை வருமானவரித்துறை சோதனை நடைபெறும் என்றார். ஆர்.கே.நகர் தேர்தலில் எங்கள் அணிக்கும், திமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்றும், தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றும் கூறினார். பயத்தின் காரணமாக 3 எம்பிக்களும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் முதல்வர் அணிக்கு சென்றனர் என தினகரன் கூறினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close