[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

பிரதமர் என்பதை மறந்துவிட்டாரா மோடி? ப.சிதம்பரம் கேள்வி

why-does-pm-not-talk-about-joblessness-lack-of-investment-p-chidambaram

குஜராத் தேர்தலில் தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து விட்டாரோ என்ற அளவுக்கு தன்னைப் பற்றியும், தனது கடந்த கால ஆட்சியைப் பற்றியும் நரேந்திர மோடி பரப்புரை செய்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

குஜராத்‌ மாநிலத்தில் டிசம்பர் 9, 14-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். அவர் பேசும்போது, ‌சீனத் தூதரை கட்டித்‌தழுவலாம், ஆனால் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய ராணுவத்தை பாராட்‌ட இயலாத நிலையில் இருப்பவர், பேசுவதைவிட அமைதி காக்கலாம் என்று ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் மோடி விமர்சித்தார். 

இந்நிலையில், குஜராத் தேர்தலில் தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து விட்டாரோ என்ற அளவுக்கு தன்னைப் பற்றியும், தனது கடந்த கால ஆட்சியைப் பற்றியும் நரேந்திர மோடி பரப்புரை செய்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில், ’வேலைவாய்ப்பு இல்லாமை, போதிய அளவுக்கு முதலீடுகள் குவியாததது, விலைவாசி உயர்வு, ஏற்றுமதி தேக்கம் போன்ற பிரச்னைகளைப் பற்றி பேசாமல் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கி‌றார்? தனது கடந்த காலங்களை பற்றியே நரேந்திர மோடி பரப்புரை செய்து வருகிறார். குஜராத் தேர்தல் என்பது மிஸ்டர் மோடிக்காக நடப்பது அல்ல; தனிப்பட்டது. 42 மாதங்களில் நல்ல காலம் வரும் என பிரதமர் உறுதியளித்தது என்ன ஆனது?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close