[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு
  • BREAKING-NEWS சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சசிகலாவின் பரோல் மனு நிராகரிப்பு

sasikala-parole-petition-rejected

சசிகலாவின் பரோல் மனுவை கர்நாடக சிறைத்துறை நிராகரித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன்  உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக்கூறி சசிகலா சார்பில் கர்நாடக சிறைத்துறையிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சசிகலாவின் பரோல் மனுவை, தொழில்நுட்ப காரணங்களால் கர்நாடக சிறைத்துறை நிராகரித்துள்ளது. சசிகலா தாக்கல் செய்துள்ள மனுவில், பரோல் அளிக்கத் தகுந்த ஆவணங்கள் இல்லை எனக் கூறியுள்ள கர்நாடக சிறைத்துறை, கூடுதல் தகவல்களுடன் புதிய மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே சசிகலா சார்பில் விரைவில் புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close