[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ரூ.100 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்ததாக ஸ்டாலின் புகார்
 • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
 • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
 • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
அரசியல் 04 Aug, 2017 10:12 PM

அணிகள் இணைந்தால் எனது தலைமையில் கட்சி செயல்படும்: டிடிவி தினகரன்

if-the-teams-merge-the-party-will-act-in-my-head-ttv-dinakaran

அதிமுக அணிகள் இணைந்தால் கூட தன்னுடைய தலைமையில்தான் கட்சி செயல்படும் என்றும் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்சி அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். கட்சியில் சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 60 நாட்கள் நேரம் கொடுத்த பின்பே புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நான் கட்சி அலுவலகத்திற்கு செல்வதை யாரும் தடுக்க முடியாது. தேவைப்படும் போது எப்போது வேண்டுமானாலும் தலைமைக் கழகம் செல்வேன். கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கே உள்ளது. அமைச்சர்கள் பேச்சை கேட்டு இரண்டு மாதங்கள் அமைதியாக இருந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டித்தான் எடப்பாடியைத் தேர்வு செய்தார். அணிகள் இணைப்பை நாங்கள்தான் செய்ய வேண்டும். புதிய நிர்வாகிகள் ஒன்று சேர்ந்துதான் செயல்படுவார்கள். அணிகள் இணைந்தால் எனது தலைமையில்தான் கட்சி செயல்படும்’ எனத் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close