[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம்: அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவர்கள் நாளை சந்திப்பு

cauvery-management-board-issue-tamilnadu-bjp-leaders-meet-amit-shah-at-tomorrow

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் நாளை சந்திக்க உள்ளனர்.

தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை, காவிரியில் இருந்து திறந்து விடும்படி, உச்ச நீதிமன்றம், அடுத்தடுத்து பிறப்பித்து வரும் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து மீறியது. இதனால், கோபமடைந்த நீதிபதிகள், கர்நாடக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியதோடு, அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு, செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டனர். இதனை முதலில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்றுக் கொண்டது.

ஆனால் திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறுகையில் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை, உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. மாநிலங்கள் இடையிலான நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வழங்கிய பின், அது தொடர்பான எந்த பிரச்னை மீதும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் என, காவிரி நடுவர் மன்றம் கூறியது பரிந்துரை மட்டுமே. அதை,மத்திய அரசு ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்’ என்றார்.

இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது. இந்ந விவகாரம் தமிழக பாஜகவிற்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர்களான மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி. இல. கணேசன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.. டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை நாளை பிற்பகல் 2 மணி அளவில், தமிழக பாஜக தலைவர்கள் சந்திக்க உள்ளனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close