[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

சசிகலா புஷ்பா எம்.பிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

delhi-hc-order-additional-security-to-sasikala-pushpa-mp

நாடாளுமன்றம் சென்று சசிகலா புஷ்பா எம்.பி.க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, திமுக எம்.பி. திருச்சி சிவாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிமுக தலைமை, சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் மேல்சபையில் பேசிய சசிகலா புஷ்பா, எம்.பி பதவியை ராஜினாமா செய்யும்படி வற்புறுத்துகிறார்கள். நான் பதவி விலகப்போவதில்லை. தமிழ் நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் சசிகலா புஷ்பா ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் திருநெல்வேலி உவரியில் உள்ள அவரது வீடு தாக்கப்பட்டதாகவும், கணவர் மற்றும் மகன் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஏ.கே.பாதக் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு பின்னர், நாடாளுமன்றம் சென்று சசிகலா புஷ்பா எம்.பி.க்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் சசிகலா புஷ்பாவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி டெல்லி போலீஸ் கமிஷ்னர், உள்துறை அமைச்சகம், டெல்லி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close