[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

டெல்லி மாநிலத்தில் நிர்வாகத் தலைவராக ஆளுநரே செயல்பட முடியும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

lg-is-the-administrative-head-of-delhi-rules-delhi-hc

கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, டெல்லியின் நிர்வாக அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டெல்லி அமைச்சரவையின் அறிவுறுத்தலின் பேரிலேயே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற கெஜ்ரிவால் அரசின் கோரிக்கையை நிராகரித்தது. துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்காமல் டெல்லி அமைச்சரவை எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மத்திய அரசின் அறிவிக்கையும் சட்ட விரோதம் கிடையாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல், துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்ட கெஜ்ரிவாலின் பல்வேறு அறிக்கைகள் சட்டவிரோதம் எனக் கூறி அவற்றை ரத்து செய்துள்ளது.

டெல்லி அரசின் நிர்வாகத் தலைவர் யார் என்பது குறித்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கெஜ்ரிவால் அரசு கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close