[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

supreme-court-to-hear-aircel-maxis-case-on-next-week

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பத்திடம் விசாரணை நடத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, அடு‌த்தவார‌ம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக்கோரி தாக்‌கல் செய்யப்‌பட்ட மனுவை விரைவில் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.

இந்த வழக்கில், ப.சிதம்பதரத்தின் பங்கு குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளதாகவும் அவர் கு‌றிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், இம்மனுவை அடுத்தவாரம் விசாரிப்பதாக தெரிவித்தனர்.

2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டி, அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாக புகார் எழுந்தது.

இந்தப் பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினர், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close