[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

சுங்கச்சாவடி ஃபாஸ்டேக்-கை எங்கு வாங்குவது?... கட்டணம் செலுத்துவது எப்படி?

how-to-get-where-to-get-fastag

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக FASTag டிஜிட்டல் முறை வரும் ஒன்றாம் தேதி முதல் கட்டாயமாகும் நிலையில் ஃபாஸ்டேக்-கை எங்கு வாங்குவது? ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி? 

சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகன நெரிசலில், இனி மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. சில்லறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், ஃபாஸ்டேக் எனும் அதிநவீன தொழில்நுபத்தை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. 

இந்தத் திட்டத்தின் மூலமாக, டிஜிட்டல் முறையில், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படப் போகிறது. டிசம்பர் 1ஆம் தேதிக்கு மேல் ஃபாஸ்டேக் இன்றி ரொக்கமாக சுங்கக் கட்டணம் செலுத்துபவர்களுக்கு 2 மடங்கு அபராதம் என்ற அறிவிப்பால் வாகன ஓட்டிகள் பதறிப்போய் இருக்கிறார்கள். 

இந்த ஃபாஸ்டேக் என்பது பிரத்யேக தகவல்களைக் கொண்ட ஒரு அட்டை. ரேடியோ அலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட RFID தொழில்நுட்பத்தின் மூலம், இது செயல்படுகிறது. NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA என்ற திட்டத்தின் மூலம், பாரத ஸ்டேட் வங்கி, HDFC, ICICI, AXIS, KOTAK MAHINDRA, PUNJAB NATIONAL BANK உள்ளிட்ட 23 வங்கிகளில், FASTAG-ஐ பெற்றுக் கொள்ளலாம். 

அதில் HDFC, ICICI உள்ளிட்ட சில தனியார் வங்கிகள், இணையதளம் மூலமாகவே ஃபாஸ்டேக்-ஐ பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளன. அதுமட்டுமின்றி PAYTM, AMAZON போன்ற APP-கள் மூலமாகவும், இதனை வாங்க முடியும். வாகனத்தின் எண், உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நிரப்பியபின், ஆர்.சி எனப்படும் பதிவுச் சான்றிதழை சம்மந்தப்பட்ட வங்கி இணையதளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். அதனுடன் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை இணைத்துவிட்டு, கட்டணத்தை செலுத்தினால்போதும். 

ஃபாஸ்டேக் அட்டை அவர்களின் வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும். அந்த அட்டையை உங்கள் காரின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக் கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது, ஃபாஸ்டேக்-இன் ரேடிய அலைவரிசை மூலமாக, வாகன ஓட்டியின் ஃபாஸ்ட் டேக் கணக்கில் இருந்து தானாகவே கட்டணத்தை கழித்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களின் பொன்னான நேரம் மிச்சமாவதோடு, பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படுவதால், ஃபாஸ்டேக் திட்டத்த‌ற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நடைமுறை செய்யப்படும் போது சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அமலுக்கு வந்த பிறகே அவற்றை கூறமுடியும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close