[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

“முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல... மகாராஷ்டிரா”- சரத் பவார் காட்டம்..!

will-bring-over-162-mlas-this-is-not-goa-sharad-pawar-at-show-of-strength

முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல, மகாராஷ்டிரா என்று தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் அஜித் பவார் துணையுடன், பாரதிய ஜனதா ஆட்சி அமைத்துள்ளதற்கு, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரதிய ஜனதாவுக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இல்லை என்றும், அனைத்து எம்எல்ஏக்களும் தங்களிடமே இருப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது. பாரதிய ஜனதா ஆட்சியமைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மனுத்தாக்கல் செய்தன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. 

இந்நிலையில், தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மும்பை ஹயாத் ஹோட்டலில் எம்எல்ஏக்களின் அணிவகுப்பை நடத்தின. அணிவகுப்புக்கு முன்பாக எம்எல்ஏக்கள் மத்தியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  “மகாராஷ்டிராவில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி, கர்நாடகா, கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும், பெரும்பான்மை பலம் இல்லாமல் பாஜக ஆட்சியை பிடித்திருக்கிறது. 

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, 162 எம்எல்ஏக்களை விட, கூடுதலான ஆதரவு எங்களுக்கே இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட முடியும் என்றும், முறைகேடுகள் நடத்த இது கோவா அல்ல, மகாராஷ்டிரா” எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என மூன்று கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் ஒருசேர உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்தப் பேரணியின்போது சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜூனா கார்கே, அசோக் சவான் உள்ளிட்டோரும் இருந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close