[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

“பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” - சரத் பவார்

there-is-no-question-of-forming-an-alliance-with-bjp-sharad-pawar

சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு செய்துள்ளதாக
அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள தேசியவாத கட்சியின் எம்.எல்.ஏ அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில்
பதிவிட்டிருந்தார்.அதில், “நான் தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். சரத் பவார் தான் எங்கள் கட்சியின் தலைவர். பாஜக-தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை வழங்கும். இந்தக் கூட்டணி மக்களின் நலனுக்காக பாடுபடும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள சரத் பவார், “மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே
இடமில்லை. சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவு
செய்துள்ளது. தவறான மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அஜித் பவாரின் தகவல்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close