[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

சோனியா, ராகுலுக்கான சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் - காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

government-withdraws-spg-cover-of-sonia-rahul-and-priyanka

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனைக் கண்டித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவர் மனைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 28 ஆண்டுகளாக இருந்து இந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விரிவான ஆய்வுகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்களை கொண்ட Z பிளஸ் பாதுகாப்பு மட்டும் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். சோனியா உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது அதிர்ச்சி தருவதாகவும், இது பாஜக அரசின் தனிப்பட்ட பழிவாங்கல் மனோபாவத்தை காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

இரு முன்னாள் பிரதமர்களின் உயிர்களை பலி கொடுத்துள்ள குடும்பத்திற்கு பாதுகாப்பை வாபஸ் வாங்கியது சரியல்ல என்றும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தங்கள் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை என்பதையும் ஆனந்த் சர்மா சுட்டிக்காட்டினார். 

இதற்கிடையில் சிறப்பு படை பாதுகாப்பை வாபஸ் பெற்ற முடிவை கண்டித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 28 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close