[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

மகாராஷ்டிராவில் 4 வது இடத்துக்குத் தள்ளப்பட்ட காங்கிரஸ்!

congress-slips-to-fourth-place-in-maharashtra

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. 288 ‌சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட‌ ‌அங்கு, ஆளும் பாஜக- சிவசேனா ஒரு‌ கூட்டணி‌யாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ‌கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் களமி‌றங்கின. பாஜக 152 இடங்களிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், காங்கிரஸ் 145 இடங்களிலும்,‌ தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. தொடங்கியதில் இருந்தே பாஜக கூட்டணி, முன்னிலை பெற்று வருகிறது. அங்கு பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி மீண்டும் அமைவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி அங்கு இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் தனிப்பட்ட வகையில் காங்கிரஸ் கட்சி, நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 

இதனால் சட்டப்பேரவையில், கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ், இந்த முறை அதை தக்க வைத்துக்கொள்ளாது என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும் என்றும் தெரிகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close