[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்?” -  சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்

how-did-gandhi-commit-suicide-exam-question-baffles-class-9-students-in-gujarat

காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என பள்ளித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குஜராத் கல்வி அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பார்த் வதேர் கூறுகையில், “குஜராத்தில் பள்ளி ஒன்றில் இண்டெர்னல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் 9ஆம் வகுப்பிற்கு கொடுக்கப்பட்ட வினாத்தாளில் காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதேபோல, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில், ‘உங்கள் பகுதியில் மதுபானங்களின் விற்பனை அதிகரித்து வருவது குறித்து புகார் கடிதம் ஒன்றை மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு எழுதவும்’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வினாத்தாளை பள்ளி நிர்வாகமே தயாரித்துள்ளது.”  எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close