[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

தாய்லாந்தில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் யானைகள் - 11 ஆக அதிகரிப்பு

elephant-death-in-thailand

தாய்லாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் குட்டியை காப்பாற்ற சென்ற தாய் யானை உட்பட 6 யானைகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மேலும் 5 யானைகள் தற்போது உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் மத்திய பகுதியில் உள்ள கவோயை தேசிய பூங்காவில் ஹா நரோக் அருவி உள்ளது. அந்த அருவிக்கு தண்ணீர் குடிக்கச்சென்ற 3 வயதான குட்டி யானை ஒன்று நீரில் மூழ்கியது. அதனை காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மேலும் 5 யானைகளும் அருவியில் தவறி விழுந்து நீரில் மூழ்கின. இந்த சம்பவம் பூங்கா ஊழியர்களையும், வனத்துறையினரையும் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விலங்கு பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தற்போது அதே அருவியில் விழுந்து மேலும் 5 யானைகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் ஆளில்லா விமானம் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நரகத்தின் நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் ஹா நரோக் அருவியில் கடந்த 1992 ஆம் ஆண்டு 8 யானைகள் தவறி விழுந்து உயிரிழந்தன. அங்கு தொடர்ச்சியாக யானை விழுந்து உயிரிழப்பதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யானைகள் எப்போதும் கூட்டமாக வாழும் குணம் கொண்டவை. அதாவது உணவு தேடலுக்காகவும், பாதுகாப்புக்காகவும் கூட்டம் கூட்டமாக செல்லும். அப்படி கூட்டத்தில் இருந்து விலகிய யானைகள் மனமுடைந்து, அதே அருவியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என வன உயிர் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் எட்வின் வீக் கூறுகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close