[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அது சரி, இ-சிகரெட் என்றால் என்ன? 

what-are-e-cigarettes

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சூழலில் இ-சிகரெட் என்றால் என்ன?

இ-சிகரெட் என்பது Electronic Nicotine delivery Systems (ENDS) வகையாகும். இந்தச் சிகரெட் புகையிலையை பயன்படுத்தாது. இதற்கு மாறாக ஒரு ஆவியாகும் தன்மை கொண்ட கரைசல் வேதிப் பொருளை பயன்படுத்துகிறது. இதில் நிக்கோடின், புரோப்லீன் கிளைகால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் இருக்கும். இந்த இ-சிகரெட் பல வடிவங்களில் இருக்கும். அனைத்தும் பேனாவை போன்று வடிவத்தில் சந்தைகளில் கிடைக்கின்றன. 

இந்த பேனா போல் உள்ள இ-சிகரெட்டில் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இந்த இ-சிகரெட்டை வாயில் வைத்து ஒருவர் உள்ளே இழுக்கும்போது இதன் செயல்பாடு தொடங்கும். இ-சிகரெட்டிலுள்ள கரைசல் ஆவியாக மாறி புகை வெளிவரும். அப்போது அந்த நபர் நிக்கோடினை உள்ளே முகர்வார். இ-சிகரெட் அதிக வலுவாக இருக்கும் பட்சத்தில் நிக்கோட்டின் வேகமாக உடம்பிற்குள் செல்லும். அது உடலுக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். 

இ-சிகரெட்டில் பல்வேறு சுவைகளில் வருகிறது. அதாவது சுவைக்கு ஏற்ப கரைசலில் வாசனை திரவியம் சேர்க்கப்படும். இ-சிகரெட்டை ஏற்கெனவே அமெரிக்காவின் மிசிகன் மற்றும் நியூயார்க் நகரங்கள் தடை செய்துள்ளன. இந்தியாவில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதால் இதனை தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close