[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

செல்போனில் பேசியபடி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு

talking-on-phone-woman-sits-on-snakes-gets-bitten-and-dies

செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்த பெண், படுக்கை அறையில் பாம்புகளை கவனிக்காமல் அதன் மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். இவர் தாய்லாந்தில் வேலை செய்கிறார். இவர் மனைவி கீதா. தாய்லாந்தில் இருக்கும் கணவருடன் அடிக்கடி போனில் பேசுவது வழக்கம். இருவரும் மணிகணக்காகப் பேசுவார்களாம். அதே போல நேற்றும் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு சுவாரஸ்யத்தில், அப்படியே வீட்டில் இருந்த படுக்கையறைக்குச் சென்றார், கீதா.

பெட்டில், இரண்டு பாம்புகள் விளையாடிபடி கிடந்தன. இதைக் கீதா கவனிக்கவில்லை. கணவருடன் பேசியபடியே, அந்த பாம்புகளின் மீது அப்படியே அமர்ந்துவிட்டார். இதையடுத்து ஆவேசம் கொண்ட அந்தப் பாம்புகள் அவரைக் கொத்தின. உடனடியாக மயங்கிய அவரை, வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது குடும்பத்தினர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அந்தப் பாம்புகள் அப்போதும் பெட்டிலேயே இருந்துள்ளன. இதையடுத்து அவர்கள், அந்த இரண்டு பாம்புகளையும் அடித்தே கொன்றுள்ளனர்.

‘பாம்புகள் இனச் சேர்க்கையில் இருந்தபோது, அந்தப் பெண் அதன் மீது அமர்ந்ததால், அவை கடித்துள்ளன’ என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close