[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“வண்டி விலையே 15,000 தான்; அபராதம் 23 ஆயிரம்” - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

gurugram-police-fines-delhi-man-rs-23-000-as-new-motor-vehicles-act-kicks-in

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஹரியானாவைச் சேர்ந்த இருவருக்கு போக்குவரத்து காவல்துறையினர் 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ‌

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ‌புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தினேஷ் மதன் என்பவரை நிறுத்திய காவலர்கள், அவரிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். இந்த ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என தினேஷ் மதன் கூறியுள்ளார். 

இதையடுத்து அவருக்கு ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவு சான்றிதழ் இல்லாததால் தலா 5 ஆயிரம் ரூபாய், காப்பீடு இல்லை என 2 ஆயிரம் ரூ‌பாய், காற்று மாசுபாட்டின் தரத்தை மீறியதற்காக 10 ஆயிரம் ரூபாய், ‌தலைக்கவசம் அணியாததால் ஆயிரம் ரூபாய் என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய்க்கான அபராத ரசீதை கொடுத்துள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ் மதன், வாகனத்தின் மதிப்பே 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில், ‌23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். ‌இதேபோல அமித் என்பவருக்கு 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, மேலும் வாகனம் தொடர்பான எந்த ஆவணங்கள் இல்லாததால் அவருக்கும் 24 ஆயிரம் ரூபாய் அபராதத்தை போக்குவரத்து காவல்துறையினர் விதித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close