பயிற்சி விமானம் விழுந்து தீப்பிடித்ததில் அதில் பயணம் செய்த 6 பேர் உயிர்தப்பினர்.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் உள்ள கானிபூர் விமான நிலையத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று தரையிறங்கியது. அதில் விமானி உட்பட 6 பேர் இருந்தனர். அப்போது விமானத்தின் டயரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, விமானம் தடுமாறி விபத்துக்குள்ளானது. உடனடியாக அதில் இருந்த 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் மீட்கப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்துபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலதிக விவரங் கள் உடனடியாக கிடைக்கவில்லை.
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
ஜில்.. கிரேட்டா! ஜில்!! - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்!
பப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு!
3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..!
வங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ரத்து