[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ 

delhi-p-chidambaram-taken-away-in-a-car-by-probe-agency-officials

டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்  அவரைக் கைது செய்துள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். ப.சிதம்பரம் பேட்டி அளிப்பதை அறிந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். ஆனால், பேட்டியை முடித்துவிட்டு ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றுவிட்டார். அதனையடுத்து, ப.சிதம்பரம்  காரை பின் தொடர்ந்து அவர்கள் சென்றனர். 

ப.சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சிபிஐ அதிகாரிகள் இல்லத்திற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். ப.சிதம்பரத்திற்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சம்மன் வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ப.சிதம்பரம் வீட்டிற்கு வந்தனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என சிபிஐ அதிகாரிகள் கோரியதால் ப.சிதம்பரம் இல்லத்திற்கு டெல்லி போலீசார் வருகை புரிந்துள்ளனர். இல்லத்திற்கு முன்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. ப.சிதம்பரம் வீட்டிற்கு முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இறுதியாக, டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை சிபிஐ அதிகாரிகள் அவர்களுடைய காரில் அழைத்துச் சென்றனர். ப.சிதம்பரம் உடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வழக்கறிஞர்களுமான அபிஷேக் மனு சிங்கி மற்றும் கபில் சிபில் உடன் சென்றனர்.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் நாளை ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close