[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

வேட்பு மனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்

manmohan-singh-files-nomination-for-rajya-sabha-from-rajasthan

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில், இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் மன்மோகன் சிங். முன்னாள் பிரதமரான இவர், ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அவர் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது பதவிக்காலம் ஜூன் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.


அம்மாநில பாஜக எம்.பி., மதன்லால் சைனி, ஜூன் மாதம் காலமானார். அவர் இடத்தில் மன்மோகன் சிங் போட்டியிடுவதாக வும் 13 ஆம் தேதி வேட்புமனுதாக்கல் செய்வார் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, மன்மோகன் சிங் ஜெய்பூரில் இன்று மனுதாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோர்  சென்றனர். வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close