[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ஆபாச பேச்சு.. மக்களவையில் வருத்தம் தெரிவித்தார் அசம் கான்

azam-khan-apologises-for-sexist-remark-rama-devi-refuses-to-relent

பாரதிய ஜனதா எம்.பி ரமா தேவிக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி எம்.பி அசம் கான், மக்களவையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா தொடர்பான விவாதத்தை, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பாரதிய ஜனதா எம்.பி ரமா தேவி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இந்த விவகாரம் குறித்து பேச எழுந்த சமாஜ்வாதி எம்.பி. அசம் கான், ஆபாசமான முறையில் ரமா தேவி குறித்து கருத்து தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிற உறுப்பினர்கள், தரக்குறைவாக பேசியதற்காக அசம் கான் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தினர்.

குறிப்பாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, திமுகவின் கனிமொழி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எனினும் தனது கருத்துக்கு மன்னிப்புக் கோர முடியாது என்றும் எம்.பி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் அசம் கான் தெரிவித்தார். 

இதையடுத்து அவர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என அசம் கானுக்கு உத்தரவிட்டார். அவையின் இந்த முடிவுக்கு கட்டுப்படாவிட்டால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய அசம் கான், தனது பேச்சை அவைத் தலைவர் தவறு என்று கருதினால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இதையடுத்து, தனது பேச்சுக்கு அசம் கான் மன்னிப்புக் கோரியுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். பிறகு பேசிய பாரதிய ஜனதா எம்.பி. ரமா தேவி, அசம் கானின் பேச்சு, பெண்கள் மட்டுமின்றி ஆண்களையும் புண்படுத்தியுள்ளதாகக் கூறினார். இதுபோன்ற கருத்துக்களைக் கேட்க பெண்கள் மக்களவைக்கு வரவில்லை என்றும் ரமாதேவி குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close