[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் - மும்பைக்கு கனமழை எச்சரிக்கை

the-last-two-days-of-rainfall-in-mumbai

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை அடுத்து, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனமழையால், சியான், மதுங்கா, மாஹிம், அந்தேரி, மலாட் மற்றும் தஹிசார் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 17 விமானங்கள், அருகில் இருக்கும் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 

14 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூலை 26ம் தேதி பெய்த கனமழையால், மும்பை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. இதனால், அலுவலகம் சென்றிருந்த பலர், வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். தற்போது மீண்டும் அதே நாளில் மும்பையில் கனமழை வெளுத்து வாங்கியதால், பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தச் சூழலில், அடுத்து வரும் நாட்களில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close