[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

பாஜகவில் சேர்ந்துவிட்டேனா? அஞ்சு ஜார்ஜ் மறுப்பு

anju-bobby-george-denies-reports-of-joining-bjp

பாஜகவில் சேர்ந்துவிட்டதாக வந்த தகவலை பிரபல தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் மறுத்துள்ளார். 

பிரபல தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ். 2003-ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக, தங்கப் பதக்கம் வென்றவர். பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள அஞ்சு பாபி ஜார்ஜ் கேரளாவில் வசித்து வருகிறார்.

இவர் கர்நாடகாவில, பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியின்போது அந்த கட்சியில் சேர்ந்துவிட்டதாக நேற்று செய்திகள் வெளி யாயின. ஏ.என்.ஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் புகைப்படத்துடன் இந்த செய்தியை வெளியிட்டன. அந்தப் படத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன், கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா உட்பட பலர் இருக்கின்றனர். ஆனால், தான் பாஜகவில் சேரவில்லை என்று அஞ்சு ஜார்ஜ் மறுத்துள்ளார். கேரள மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான முரளிதரனும் மறுத்துள்ளார். 

தனது குடும்ப நண்பரான அஞ்சு ஜார்ஜ், தன்னை பார்ப்பதற்காகவே கர்நாடகாவில் நடந்த விழாவுக்கு வந்தார் என்றும் அப் போது தவறுதலாக அவர் பாஜகவில் சேர்ந்துவிட்டதாக செய்தி வெளியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close