[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

பட்ஜெட் வாசிப்பில் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்த நிர்மலா சீதாராமன்

nirmala-sitharaman-thanks-to-farmers-in-budget

பட்ஜெட் வாசிப்பின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

2019-2020-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது விவசாயிகள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், உணவுத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா திகழ்வதற்கு விவசாயிகளே காரணம் என்றார். எனவே விவசாயிகளுக்கு தனது நன்றியினையும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துக் கொண்டார்.

விவசாயிகள் மேம்பாட்டிற்காக 10 ஆயிரம் புதிய அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன், விவசாயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது என்றும் கூறினார். விவசாயிகளின் வருமானம் 2022ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close