[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

“காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள்”- ராகுல்காந்தி..!

elect-new-congress-president-rahul-gandhi

காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்யுங்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் பலரும் ராகுல்காந்தியின் ராஜினாமா முடிவை ஏற்க மறுத்தனர். ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை என்றும் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் ராகுல் காந்தி வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என அவர் கூறியுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்டுங்கள் எனவும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close