[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

அதிவேகத்தில் பைக்கை தூக்கி வீசிய கார் : சிசிடிவி காட்சிகள்

car-and-bike-accident-in-telangana-cctv-footage

தெலங்கானா மாநிலத்தில் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தெலுங்கானா கரீம் நகர் மாவட்டம், நுஸ்துலாப்பூர் அருகே சோமையா என்பவர் தமது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் குறுக்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனம் மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இதில், இருசக்கர வாகனம் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளது. 

 

இக்கோர விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே சோமையா உயிரிழந்தார். அவரது நண்பர் ரவி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மனதை பதற வைக்கும் இந்த விபத்து காட்சிகள் அப்பகுதியில் காவல்துறையினரால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close