[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

சாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்!

pregnant-woman-shot-dead-by-teenage-brothers-in-indore-s-betma

சாதி மாறி திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணி சகோதரியை, அவரது சகோதரர்களே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பெட்மா பகுதியை சேர்ந்தவர் குல்தீப் ரஜவத். இவரும் அதே பகுதியை சேர்ந்த புல்புல் என்பவரும் காதலித்து வந்தனர். குல்தீப் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் புல்புல் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் கடந்த 8 மாதத்துக்கு முன் வீட்டை மீறி திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையே புல்புல் கர்ப்பமானார்.

தனது வீட்டுக்குச் சென்று அம்மாவையும் சகோதரர்களையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினார் புல்புல். அதன்படி நேற்று சொந்த வீட்டுக்குச் சென்றார். அம்மா, அப்பா, டீன் ஏன் சகோதர்கள் கார்த்திக், சுபம் ஆகியோரைச் சந்தித்துவிட்டு கணவர் வீட்டுக்குத் திரும்பி னார். இந்நிலையில் புல்புல்-லின் வீட்டுக்கு வந்த அவரது சகோதரர்கள், மறைத்து வந்திருந்த துப்பாக்கியால், அவர் நெற்றியில் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

(குல்தீப்)

ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்த புல்புல்-லை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் பெட்மா காவல் நிலையத்தில் கார்த்திக்கும் சுபமும் சரணடைந்தனர்.

குல்தீப் கூறும்போது, ‘’8 மாதத்துக்கு முன் நாங்கள் திருமணம் செய்தோம். எங்கள் திருமணத்துக்கு புல்புல் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் அவர் சகோதரர்கள். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்’’ என்றார்.

கர்ப்பிணி என்றும் பாராமல் இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close