[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியிடம் ஆன்லைன் மோசடி

ex-chief-justice-of-india-rm-lodha-duped-of-rs-1-lakh-in-online-scam

உச்ச ‌நீதிமன்ற முன்னாள் தலைமை நீத‌பதி ஆர்.எம்.லோதாவிடமிருந்து ஆன்-லை‌ன் மோசடியாளர்கள் ஒரு லட்சம் ரூபாயை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆர்.எம்.லோதா. ஓய்வு பெற்றுவிட்டார். இவரது நண்பர் பி.பி.சிங். இவரும் முன்னாள் நீதிபதி. இருவரும் இமெயிலில் அவ்வப்போது தகவல் பரிமாறிக்கொள்வது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, நீதிபதி சிங்கிடம் இருந்து அவருக்கு மெயில் வந்தது. அதில், தனது உறவினரின் அறுவை சிகிச்சைக்காக அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் கீழ்கண்ட வங்கி கணக்குக்கு உடனடியாக பணம் அனுப்புமாறும் கேட்கப் பட்டிருந்தது.

உடனடியாக நீதிபதி சிங்கை, போனில் தொடர்பு கொண்டார் லோதா. லைன் கிடைக்கவில்லை. பின்னர் அதை உண்மை என்று நம்பிய அவர், குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு இரு தவணைகளாக தலா 50 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில், பி.பி.சிங்கை சந்தித்தார் லோதா. அப்போது, தனது இமெயில் ஹேக் செய்யப்பட்டு விட்டதை தெரிவித்த சிங், தான் பணம் கேட்டதாக தனது உறவினர்களுக்கு மெயில் சென்றதாகவும் தெரிவித்தார். அப்போது லோதா, தானும் பணம் அனுப்பியதாக சொல்ல, பிறகுதான் உண்மை தெரிய வந்தது. 

பி.பி.சிங்கின், இ-மெயில் முகவரியை ‌ஹேக் செய்த ஆன்-லைன் மோசடியாளர்கள், லோதாவை தொடர்பு கொண்டு, பணம் பறித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த லோதா, இதுபற்றி தெற்கு டெல்லியில் உள்ள‌ மா‌ளவியா நகர் காவல் நி‌லையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close