[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

கொல்கத்தாவில் அமித்ஷா பேரணியில் வன்முறை - வாகனத்திற்கு தீ வைப்பு 

violence-at-amit-shah-s-kolkata-rally-stones-thrown-vehicles-burnt

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த பேரணியின் போது வன்முறை ஏற்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்குவங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மே 19ம் தேதி இறுதிகட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கு, கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென வன்முறை ஏற்பட்டது. 

திரிணாமுல் காங்கிரஸ் - பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டபோது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 

கொல்கத்தா விவேகனந்தா கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையில் இருந்த வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டன. கல்லூரி வளாகத்தில் இருந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி சந்திர வித்யாசகர் சிலை உடைக்கப்பட்டது.

வன்முறை எப்படி தூண்டப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, பல வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. சில வீடியோக்களில் காவி உடை அணிந்தவர்கள், மற்றொரு பிரிவினர் மீது கற்களை வீசுவதுபோல் உள்ளது. வன்முறைக்கு நீங்கள்தான் காரணம் என்று பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக, ஜாதவ்பூர் தொகுதியில் நேற்று அமித்ஷா பங்கேற்கவிருந்த பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மம்தா பானர்ஜி அரசால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க கூட அனுமதி அளிக்கப்படவில்லை. கூட்டம் நடைபெறவிருந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close