[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

கச்சா எண்ணெய் இறக்குமதி : ஜூன் வரை இந்தியாவுக்கு வாய்ப்பு?

us-could-delay-action-on-oil-trade-sanctions-till-june

இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் ஜூன் வரை இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுக்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை அமெரிக்கா கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ம் தேதி வரை அமெரிக்கா நீட்டித்தது. 

இந்நிலையில் அமெரிக்கா விதித்த காலக்கெடுவான மே 2 ம் தே‌தி கடந்துவிட்டது.  மே2ம் தேதிக்கு பிறகு காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என தெரிவித்த அமெரிக்கா, காலக்கெடுவுக்கு பிறகும் இறக்குமதியை தொடரும் நாடுகளுக்கு‌‌‌‌ பொருளாதார தடை விதிக்க வாய்ப்‌புள்ளதாகவும் தெரிகிறது.‌‌

இந்நிலையில் இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால் இந்தியாவுக்கு ஜூன் வரை அமெரிக்கா நெருக்கடி கொடுக்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் வில்புல் ரோஸ், இறக்குமதி தொடர்பான சில முடிவுகளை இந்தியாவில் புதிய அரசின் ஆட்சி தொடங்கியதும் எடுப்போம் என தெரிவித்துள்ளார். இதனால் ஜூன் வரையிலும் கச்சா எண்ணெய் இறக்குமதி நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பிக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக, இது குறித்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியதாகவும், இந்தியாவில் இது தேர்தல் நேரம் என்பதால் கச்சா எண்ணெய் விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யாவிட்டால் கச்சா எண்ணெயின் விலை அதிகமாகிவிடும். அதன் தாக்கத்தால் பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்துக்கு பிறகு கச்சா எண்ணெய் நிலைப்பாட்டில் இந்தியா எடுக்கும் முடிவு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close