[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

attack-on-bjp-candidate-in-west-bengal

மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.‌

பாரக்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் திடீரென பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரசார் வெளியூர்களில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் வாக்குப்பதிவு மையத்துக்கு அருகே இருந்த பொதுமக்களை வாக்களிக்க கூடாது என மிரட்டியதாகவும் பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து வேட்பாளர் அர்ஜுன் சிங்கை சுற்றி அரணாக நின்ற துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கினர். இந்த சம்பவத்தில் சில பொதுமக்களும் தாக்கப்பட்டதால் அவர்கள் துணை ராணுவப் படை மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close