[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

மோடியை திருடன் என்றதற்காக மன்னிப்பு கோரினார் ராகுல் 

rahul-gandhi-says-will-apologise-to-top-court-for-misquoting-it

பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.  

பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் எனக் கூறிவிட்டதாக ராகுல் காந்தி பரப்புரையின்போது இம்மாத தொடக்கத்தில் பேசியிருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ராகுல் காந்தி திரித்துக் கூறியதாக கூறி பாஜக ‌எம்பி மீனாட்சி லேக்கி வழக்கு தொடர்ந்திருந்தார். 

அப்போது நீதிமன்ற உத்தரவு குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும் அவருக்கு இவ்விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் தன் பேச்சு குறித்து ராகுல் காந்தி மீண்டும் பிரமாண‌ பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த வார‌‌ம் உத்தரவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராகுல், உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டி மோடியை தவறாக பேசியதற்காக மீண்டும் வருத்தம் தெரிவித்திருந்தார்.  

       

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் மீனாட்சி லேகியின் வழக்கறிஞர் வலியுறுத்தினார். ராகுல் காந்தி வருத்தம் தெரிவிப்பது வெறும் கண் துடைப்புதான் என வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறினார். வருத்தம் தெரிவித்ததற்கு பதில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, ராகுல் காந்தி பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் மன்னிப்பு கோரினார். இருப்பினும், அரசியல் களத்தில் பிரதமரை திருடன் என கூறியதில் உறுதியாக உள்ளதாக ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close