[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

காங்கிரசின் ரூ.72000 வாக்குறுதியால் விலைவாசி உயரும் - பிரதமர் மோடி 

pm-modi-says-prices-of-rice-wheat-kerosene-and-lpg-to-rise-if-congress-comes-to-power

ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் காங்கிரஸ் கட்சியின் திட்டம் அமல்படுத்தப்பட்டால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயரும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி தங்கள் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து பேசிய பிரதமர் மோடி 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் காங்கிரஸ் கட்சியின் திட்டம் அமல்படுத்தப்பட்டால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயரும் என தெரிவித்தார்.

ஒடிஷா மாநிலத்தில் சோன்பூர் என்ற ஊரில் பரப்புரையில் மோடி இவ்வாறு பேசினார். காங்கிரஸ் கட்சி எப்போதும் வறுமை ஒழிப்பு என்ற கோஷத்தையே தேர்தலின் போது பயன்படுத்துவதாகவும் அக்கட்சியை ஒழித்துவிட்டாலே வறுமை ஒழிந்து விடும் என்றும் மோடி கூறினார். 

காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு என்பது வெறும் கோஷம் மட்டுமே என்றும், செயல்முறையில் எதுவும் இருக்காது என்றும் மோடி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டிஸ்கர் மாநிலத்தில் பேசிய பிரதமர், வலுவான ஆட்சி அமைந்தால்தான் பயங்கரவாதிகளை தண்டிக்க முடியும், வளர்ச்சிக்கு வித்திட முடியும் என்றார். காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட பயங்கரவாதிகளும் பிரிவினைவாதிகளும் அனுமதிக்கப்பட்டனர் என்றும் மோடி குற்றம்சாட்டினார். 

ராணுவ வீரர்களுக்கு கவசமாக திகழும் சிறப்பு சட்டத்தை நீர்த்துப் போகச்செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் சாடினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close