[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

“காங்கிரசின் 72 ஆயிரம் திட்டம் கேலிக்கூத்தானது” - மோடி விமர்சனம்

congress-poor-fund-scheme-is-comedy-pm-modi-comments

ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வருவாய் உறுதியளிப்பு தரும் காங்கிரஸ் கட்சியின் திட்டம் கேலிக் கூத்தானது என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். நடைபெற இருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று தெரிவித்த மோடி, நாட்டை பிளவுப்படுத்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார். நிலத்திலும், வானிலும், விண்வெளியிலும் தனது அரசு துல்லியத் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

முந்தைய ஆட்சியில் ஏழைக் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கே தொடங்காத காங்கிரஸ் கட்சி, ஏழை தொழிலாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் வருவாய் உறுதி திட்டத்தை அறிவித்திருப்பது கேலிக்கூத்தானது என்று அவர் விமர்சித்தார். இந்தத் தேர்தல் வலிமையான அரசுக்கும் முந்தைய பலவீனமான அரசுகளுக்கும் இடையேயான போட்டி எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தனது 5 ஆண்டுகால பணிகளைப் பட்டியலிட இருப்பதாகவும், அதுபோல எதிர்க்கட்சிகளும் வெளியிட முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close