[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

’ராகுல் காந்தி குழந்தை, அவருக்குப் பதில் சொல்ல மாட்டேன்’: மம்தா பானர்ஜி

mamata-banerjee-calls-rahul-gandhi-a-small-kid

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சின்னக் குழந்தை, அவருக்கு பதில் சொல்லமாட்டேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மக்களவைத் தேர்தலில் திரிணாமுல், இடதுசாரிகள், காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளும் தனித்தனியாக போட்யிடுகின்றன. மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் 4 கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. கடந்த வாரம் மால்டா நகரில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ராகுல் காந்தி, மாநில அரசை கடுமையாக விமர்சித்தார். ’’பிரதமர் மோடியை போலவே, மம்தா பானர்ஜியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’’ என்றார்.

இந்நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த மம்தா பானர்ஜியிடம் ராகுல் காந்தியின் புகார் குறித்து கேட்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மம்தா பானர்ஜி, "ராகுல் காந்தி சின்ன குழந்தை. அவர் எதையாவது சொல்வார். என்ன நினைக்கிறாரோ, அதையெல்லாம் பேசுவார். அதற்கெல்லாம் எந்த கருத்தையும் சொல்ல மாட்டேன்’’ என்றார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close