[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

வதோதராவில் பிரதமர் மோடி போட்டியில்லை?

pm-modi-not-contested-in-vadodara-constituency

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியில் போட்டியிடுவது சந்தேகம் தான் என அம்மாநில பாஜக தலைவர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்‌களவை தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல் இம்முறையும் இவ்விரு தொகுதிகளிலும் அவர் போட்டியிடுவார் என கூறப்பட்டது. அதற்கேற்றபடி அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், வதோதரா தொகுதியில் அவர் போட்டியிடுவாரா என்பது கேள்விகுறியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா காந்திநகரில் போட்டியிடுவதால், ஒரே மாநிலத்தில் இரு தேசிய தலைவர்கள்‌ போட்டியிட மாட்டார்கள் என குஜராத் பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், பிரதமர் மோடி சூரத் நகரில் இருந்து போட்டியிடலாம் என வதந்தி பரவி வருகிறது. இதனை கட்சி மேலிடம் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் அதிக இடங்களை வென்றிருப்பதால் துவண்டு போயிருக்கும் கட்சி தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக குஜராத்தில், பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்ற குரல்களும் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close