ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மூலம் பெறப்படும் வரிப்பணம், அனைத்து மாநிலங்களுக்குமே பகிர்ந்தளிக்கப்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான உரை குறித்து அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தேர்தல் அறிக்கைபோன்று உள்ளது என்று தெரிவித்தார். அத்துடன் ஜி.எஸ்.டி. வரிவசூலில் தமிழகத்திற்கான நிதியை பெறுவதற்கு கூட, மத்திய அரசிடம் பிச்சையெடுக்கும் நிலை உள்ளதாகவும் சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய பியூஷ் கோயல், தங்கள் நிதிக்காக மாநிலங்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறுவது தவறு என்றார். ஜி.எஸ்.டி. மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக கருதக்கூடாது என்ற அவர், முன்பை காட்டிலும் அதிகமாகவே நிதி பகிர்வு செய்யப்படுவதாக கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு
புரோ கைப்பந்து லீக் - சென்னை-கொச்சி அணிகளிடையே நாளை அரை இறுதி
“பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க நடவடிக்கை” - நிதின் கட்காரி
மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்தின் அமைப்புக்கு பாகிஸ்தான் தடை
அதானி மருத்துவமனையில் ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பு - குஜராத் அரசு