[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் - எதிர்பார்ப்புகள் அதிகரிப்பு ?

budget-2019-did-modi-govt-create-as-many-jobs-as-it-promised

இடைக்கால மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மக்களுக்கும்‌ விவசாயிகளுக்கும் முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் ஆண்டில் புதிய அரசு அமையும் வரை செய்ய வேண்டிய செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு நடைமுறையாக கருதப்படுகிறது. ஆனால், இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தலுக்கு முன்னதாக வருவது என்பதால், அதில் மக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் தற்போதைய பட்ஜெட்டிலும் முக்கியமான சலுகைகள் வெளியாக இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே யூகங்கள் வெளியாகி வருகின்றன. 

Image result for budget 2019

குறிப்பாக விவசாயிகளைக் கவரும் வகையில் மிகப்பெரிய சலுகை திட்டம் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்ற சலுகைகள் வழங்காமல் நேரடியாக குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் வங்கிக் கணக்கில் செலுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன‌ மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலையான வருமானத்தை உறுதிப்படுத்தும் குறைந்தபட்ச வருமான திட்டம் (UNIVERSAL BASIC INCOME) குறித்தும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

Image result for budget 2019

நடுத்தர பிரிவினரை ஈர்க்கும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு அல்லது வருமானத்தில் நிரந்தர கழிவு அளவு உயர்வு போன்ற சலுகை அறிவிப்புகளும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் குறித்த யூகங்கள் எந்தளவுக்கு நிஜமாகும் என்பது நிதியமைச்சரின் உரையின் போது மட்டுமே தெரியவரும். மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், தற்காலிக நிதியமைச்சராக ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close