[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

எமர்ஜென்சி ஹீரோ: ஈழ ஆதரவாளர்களுக்கு புகலிடம் தந்தவர் பெர்னாண்டஸ்!

george-fernandes-anti-emergency-crusader-passes-away

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார் இன்று! அவருக்கு வயது 88.

யார் இந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்?

கர்நாடக மாநிலம் மங்களூரில் 1930ம் ஆண்டு பிறந்தவர் பெர்னாண்டஸ். பெற்றோரின் விருப்பதற்கு ஏற்ப வேதக் கல்வி பயின்று மதகுருவான அவரால், அதில் நீடிக்க முடியவில்லை. புரட்சிகர எண்ணம் கொண்ட அவர், அதில் இருந்து விலகி, தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் சோஷலிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனார். 

Read Aslso -> முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்..!

1967 மக்களவைத் தேர்தலில் சம்யுக்த சோஷலிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சங்க தலைவர் பதவி அவரைத் தேடி வந்தது. 1975-ல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். தலைவர்கள் சிறையில் அடைக்கபப்ட்டனர். ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது பெர்னாண் டஸ், மீனவர் மற்றும் சீக்கியர் வேடத்தில் மாறுவேடம் பூண்டு சுற்றினார். எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடந்த மாநிலங்களான குஜராத், தமிழ்நாட்டில் தலைமறைவாக செயல்பட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதனால் எமர்ஜென்சி ஹீரோ என்று அழைக் கப் பட்டார்.

சிறையில் இருந்தே வென்றவர்

கடந்த 1976 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட அவரது கை, கால்களில் விலங்கிட்டு போலீஸ்காரர்கள் கொடுமைப்படுத்தினர். இதையடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு இந்திரா காந்தி தோல்வியைடந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனதும் அந்த அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது எளிமை எல்லோருக்கும் பிடித்த ஒன்று. 

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சராக பணியாற்றிய போது தீவிரவாதிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியவர், பெர்னாண்டஸ். இவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோதுதான் கார்க்கில் போர் ஏற்பட்டது.

ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கு இவரது வீடு, புகலிடமாக இருந்தது என்பார்கள். கடந்த 1983-ம் ஆண்டில் இந்திய அமைதி படை, இலங்கையில் தமிழர் பகுதியில் நடத்திய படுகொலைச் புகைப்பட ஆதாரங்களுடன் நூலாக வெளியிட்டவர் இவர். இதனால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். 

9 முறை வென்றவர்

1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வான பெர்ணான்டஸ், பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று ஒன்பது முறை மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறார். 2009 ஆம் ஆண்டிலிருந்து பீகார் மாநிலத் திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2010 வரை மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட்ட அவர், பின்னர் உடல்நிலைக் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

பின், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த பெர்ண்டாண்டஸ், தனது 88 வது வயதில் இன்று மறைந்து விட்டார். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close